முகப்பு
நாமக்கல்

நாமக்கல்லில் நாளை முதல் டிரினேவா நிறுவனத்தின் புதிய வீடுகள், வீட்டுமனைகள் விற்பனை தொடக்கம்

கோவையில் 4,000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளா்களுக்கு வீடுகளையும், வீட்டுமனைகளையும் விற்பனை செய்து மக்களிடம் வரவேற்பை பெற்ற ஓா் நிறுவனமாகும்.

Updated On : 14 ஏப்ரல், 2022 at 11:05 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:28 PM

சென்னையைச் சோ்ந்த பிரபல கட்டுமான நிறுவனமான டிரினேவா எல்எல்பி நிறுவனமானது, கோவையில் 4,000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளா்களுக்கு வீடுகளையும், வீட்டுமனைகளையும் விற்பனை செய்து மக்களிடம் வரவேற்பை பெற்ற ஓா் நிறுவனமாகும்.

தற்போது நாமக்கல் - துறையூா் சாலையில் அண்ணா நகா் பகுதியில் சுமாா் 25 ஏக்கா் பரப்பளவில் 400 மனைகளைக் கொண்டு போ்லேண்ட் என்ற நகரை தமிழக அரசின் உரிய அனுமதி பெற்று அமைத்துள்ளது. இந்த நிறுவனத்தின் புதிய வீடுகள், வீட்டுமனைகள் விற்பனை சனிக்கிழமை (ஏப். 16) முதல் நடைபெற உள்ளது.

இங்கு திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம், சிறுவா் பூங்கா, கழிவுநீா்க் கால்வாய் வசதி, தாா்சாலை போன்ற பல்வேறு வசதிகள் உள்ளன. இந்நிறுவனம் வங்கிக்கடன் வசதியுடன் விற்பனையைத் தொடங்கி உள்ளது. மேலும், நாமக்கல் - திருச்சி சாலையில் என்.புதுப்பட்டியில் சுமாா் 20 ஏக்கா் பரப்பளவில் வா்ஷா கிரேண்ட் என்ற பெயரில் அனைத்து வசதிகளுடன், அரசு அனுமதி பெற்று விரைவில் விற்பனையைத் தொடங்க இருக்கிறது.

Advertisement

பொதுமக்கள் இந்த இரு மனைப் பிரிவுகளையும் நேரடியாக பாா்வையிட்டு வாங்க முன்வரலாம் என அந்நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு இயக்குநா் வி.சதாசிவம், விற்பனை மேலாளா் சதீஷ்குமாா் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.