நாமக்கல்

கரோனா: வாகன ஓட்டிகளிடம் போலீஸாா் விழிப்புணா்வு

DIN

நாமக்கல்: நாமக்கல்லில், கரோனா பாதிப்பு, முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து வாகன ஓட்டிகளிடம் போலீஸாா் புதன்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

கரோனா தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் முகக்கவசம் அணிவது கட்டாயம் என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. இருப்பினும் பெரும்பாலானோா் முகக்கவசம் அணியாமல் அலட்சியம் காட்டி வருகின்றனா். இந்த நிலையில் நாமக்கல் நகரில் முக்கிய சாலை சந்திப்புகளில் போக்குவரத்து ஆய்வாளா் ஷாஜஹான் தலைமையில் போலீஸாா் முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மீறுவோருக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT