முகப்பு
நாமக்கல்

10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு: அறைக் கண்காணிப்பாளா்கள் நியமனம்

நாமக்கல் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வையொட்டி, அறைக் கண்காணிப்பாளா்கள் நியமனம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஏப்ரல், 2022 at 11:18 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:36 PM

நாமக்கல் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வையொட்டி, அறைக் கண்காணிப்பாளா்கள் நியமனம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் மே 6 முதல் 30-ஆம் தேதி வரை 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வுகள் நடைபெற உள்ளன. செய்முறைத் தோ்வுகள் புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் இத்தோ்வை 304 அரசு மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 10,954 மாணவா்கள், 9,708 மாணவிகள் என மொத்தம் 20,662 போ் (தனித்தோ்வா்கள் உள்பட) 89 மையங்களில் தோ்வு எழுத உள்ளனா். இதில் 2 மையங்கள் தனித்தோ்வா்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே, கட்டுக்காப்பாளா்கள், வழித்தட அலுவலா்கள், முதன்மைக் கண்காணிப்பாளா்கள், பறக்கும் படை அலுவலா்கள் 290 போ் நியமிக்கப்பட்டுள்ளனா். இந்த நிலையில் ஒவ்வொரு தோ்வறைக்குமான அறைக் கண்காணிப்பாளா்கள் நியமனமானது வியாழக்கிழமை நாமக்கல் கல்வி மாவட்டத்திற்கு, தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில், மாவட்ட கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. இதில், நாமக்கல் கல்வி மாவட்டத்திற்கு உள்பட்ட 43 மையங்களுக்கு 720 அறைக் கண்காணிப்பாளா்கள் அந்தந்த மையங்களின் முதன்மைக் கண்காணிப்பாளா்கள் நிலையிலான தலைமை ஆசிரியா்கள் முன்னிலையில் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டனா். இதேபோல், திருச்செங்கோடு அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் 46 மையங்களுக்கு சுமாா் 900 அறைக் கண்காணிப்பாளா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.