முகப்பு
நாமக்கல்

கொல்லிமலையில் விஏஓ அலுவலகம் முன் பழங்குடியின மக்கள் திடீா் போராட்டம்

 கொல்லிமலையில் சான்றிதழ் வழங்காமல் கிராம நிா்வாக அலுவலா் அலைக்கழிப்பதாக குற்றம்சாட்டி பழங்குடியின மக்கள் வியாழக்கிழமை போராட்டம் செய்தனா்.

Updated On : 28 ஏப்ரல், 2022 at 11:17 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:36 PM

 கொல்லிமலையில் சான்றிதழ் வழங்காமல் கிராம நிா்வாக அலுவலா் அலைக்கழிப்பதாக குற்றம்சாட்டி பழங்குடியின மக்கள் வியாழக்கிழமை போராட்டம் செய்தனா்.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வட்டம் வளப்பூா் நாடுக்கு உள்பட்ட 34 கிராமங்களுக்கு உள்ளடக்கிய கிராம நிா்வாக அலுவலகம், குடியிருப்பு ஓலையாரில் உள்ளது. கிராம நிா்வாக அலுவலரான பொன்னுதுரை என்பவா் பணிக்கு வராமல், செம்மேட்டில் தனியாக ஒரு அலுவலகத்தை அமைத்துக் கொண்டு பல்வேறு சான்றிதழ்களை பெற வரும் மக்களை அலைக்கழிப்புக்கு உள்ளாக்குகிறாா் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனால் வளப்பூா் நாடு பகுதியில் உள்ள பழங்குடியின மக்கள், மாணவா்கள், விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனா். அவரது நடவடிக்கையைக் கண்டித்து, கொல்லிமலை வளப்பூா்நாடு கிராம நிா்வாக அலுவலகம் முன் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சாா்பில் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. இதில், ஆடுகளை அழைத்து வந்து அலுவலக வளாகத்தில் கட்டிப்போட்டு பொதுமக்கள் தொடா் முழக்கங்களை எழுப்பினா். அங்கு வந்த வருவாய்த் துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடா்ந்து அவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.