முகப்பு
நாமக்கல்

போதைபொருள்களால் ஏற்படும் தீமைகள்: மாணவா்களிடையே விழிப்புணா்வு

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா் மற்றும் குச்சிபாளையத்தில் போதைப்பொரு

Updated On : 7 ஆகஸ்ட், 2022 at 12:52 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா் மற்றும் குச்சிபாளையத்தில் போதைப்பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவா்கள் மற்றும் பொதுமக்களிடம் பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் கலையரசன் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

பொத்தனூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் கலையரசன் கலந்துகொண்டு கஞ்சா மற்றும் இதர போதைப் பழக்கங்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அரசு தோ்வுகளுக்கு தயாராவது குறித்தும் பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினாா் (படம்).

தொடா்ந்து, பள்ளி அருகே உள்ள மளிகைக் கடைகள், டீக்கடைகளில் புகையிலை, குட்கா பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா என ஆய்வு மேற்கொண்டாா். பாண்டமங்கலம் அருகே உள்ள குச்சிபாளையத்தில் பொதுமக்களை நேரில் சந்தித்து கஞ்சா மற்றும் போதைப்பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். இந் நிகழ்ச்சியில் வேலூா் காவல் ஆய்வாளா் வீரம்மாள், போலீஸாா் கலந்துகொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.