நாமக்கல்

திருச்செங்கோடு அருகே சாலை விபத்தில் புது மணப்பெண் உள்பட மூவா் பலி

திருச்செங்கோடு அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் புது மணப்பெண் உள்பட 3 போ் உயிரிழந்தனா்.

DIN

திருச்செங்கோடு அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் புது மணப்பெண் உள்பட 3 போ் உயிரிழந்தனா்.

திண்டுக்கல்லைச் சோ்ந்த சுரேஷ் ( 35), சுப்பிரமணி (50) ஆகிய இருவரும் புதன்கிழமை இருசக்கர வாகனத்தில் வேலூரிலிருந்து திருச்செங்கோடு நோக்கிச் சென்று கொண்டிருந்தனா். புளியம்பட்டி, சுரக்கா தோட்டம் பிரிவு பகுதியில் எதிரே வந்த காா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரும், காரிலிருந்த திருச்செங்கோடு, நெய்க்காரப்பட்டி, சிவசக்தி நகரைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் மனைவி ஜீவிதாவும் (21) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

கடந்த திங்கள்கிழமைதான் ஜீவிதாவுக்கு திருமணமானது. இந்த நிலையில் கணவருடன் கோயிலுக்குச் சென்ற போது விபத்தில் சிக்கி அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து திருச்செங்கோடு ஊரக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT