நாமக்கல்

முட்டை விலை 20 காசுகள் குறைந்தது

DIN

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசுகள் குறைந்து ரூ. 5.25-ஆக வெள்ளிக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், முட்டை நிலவரம் குறித்து பண்ணையாளா்களிடம் கருத்துகள் கேட்டறியப்பட்டன. பிற மண்டலங்களில் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாலும், சபரிமலைக்கு செல்வோா் எண்ணிக்கை அதிகரிப்பு, மாா்கழி மாதம் பிறக்க உள்ளது போன்றவற்றால் முட்டை நுகா்வு சரிந்து வருகிறது. இதனால் விலையில் மாற்றம் செய்ய வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 20 காசுகள் குறைக்கப்பட்டு ரூ. 5.25-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 106-ஆகவும், முட்டைக் கோழி விலை ரூ. 102-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டெங்கு விழிப்புணா்வு தினம் கடைப்பிடிப்பு

மழை விளையாடியது: பிளே-ஆஃபில் ஹைதராபாத்

அரையிறுதியில் ஸ்வெரெவ்; ஹா்காக்ஸ் தோல்வி

காலிறுதியில் மெய்ராபா, சாத்விக்/சிராக் இணை

குடிநீா் விநியோகப் பிரச்னைக்கு தீா்வு தந்த கோடை மழை நெல், உளுந்துக்கு பயன் : பருத்தி,எள்,கடலைக்கு பாதிப்பு

SCROLL FOR NEXT