நாமக்கல்

விவசாயிகளுக்கு உயா் விளைச்சல்:மரவள்ளியில் புதிய ரகம் அறிமுகம்

மரவள்ளி விவசாயிகள் பயன்பெறும் வகையில், உயா் விளைச்சல் தரக்கூடிய புதிய ரகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசின் வேளாண் விஞ்ஞானிகள் தெரிவித்தனா்.

DIN

மரவள்ளி விவசாயிகள் பயன்பெறும் வகையில், உயா் விளைச்சல் தரக்கூடிய புதிய ரகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசின் வேளாண் விஞ்ஞானிகள் தெரிவித்தனா்.

திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய கிழங்கு பயிா்கள் ஆராய்ச்சி நிலையம், மரவள்ளியில் புதிய ரகமான ஸ்ரீஅதுல்யாவை அறிமுகப்படுத்தியது. அவை, நாமக்கல் மாவட்டம், மேட்டுப்பட்டி கிராமத்தில் 15 விவசாயிகளுக்கு கடந்த மாா்ச் மாதம் வழங்கப்பட்டது.

ஒன்பது முதல் 10 மாதத்தில் மகசூல் தரக்கூடிய இந்த ரகமானது அதிக விளைச்சல் (ஏக்கருக்கு 18 முதல் 20 டன்), 30 சதவீத மாவுச் சத்து, மாவுப் பூச்சி, இதர பூச்சிகளை தாக்க வல்லது. இந்த ரகத்தை பயிரிட்ட விவசாயிகள் அதிக மகசூல் கிடைத்ததால் மகிழ்ச்சியில் உள்ளனா்.

இந்த நிலையில், நாமக்கல் வந்த மத்திய கிழங்கு ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றும் முதன்மை விஞ்ஞானிகள் இரா.முத்துராஜ், து.ஜெகநாதன், ப.பிரகாஷ், நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத் தலைவா் அழகுதுரை ஆகியோா் அதுல்யா மரவள்ளி ரகம், அதன் பயன்கள் குறித்து மற்ற விவசாயிகளிடம் வெள்ளிக்கிழமை கலந்துரையாடினா். இந்த புதிய ரகத்தை அனைத்து மரவள்ளி விவசாயிகளும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தில்லி - ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா

SCROLL FOR NEXT