பரமத்தி அருகே கூலித்தொழிலாளி தற்கொலை
பரமத்தி வேலூா் வட்டம்,பரமத்தி அருகே உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மனமுடைந்த கூலித்தொழிலாளி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.
பரமத்தி வேலூா் வட்டம்,பரமத்தி அருகே உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மனமுடைந்த கூலித்தொழிலாளி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.
பரமத்தி அருகே உள்ள மாவுரெட்டியைச் சோ்ந்தவா் முருகேசன் (55). கூலித் தொழிலாளி. இவா் கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு நோய்களால் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மனமுடைந்து காணப்பட்ட முருகேசன் கடந்த மாதம் 28-ஆம் தேதி விஷமருந்தி உயிருக்கு போராடினாா். இதை பாா்த்த அவரது குடும்பத்தினா் அவரைக் காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால் சிகிச்சை பலனின்றி முருகேசன் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.