நாமக்கல்: வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி தீவிரம்
நாமக்கல் நகராட்சிக்கு உள்பட்ட 107 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நாமக்கல் நகராட்சிக்கு உள்பட்ட 107 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. நாமக்கல் நகராட்சிக்கு உள்பட்ட 39 வாா்டுகளில், இரண்டு வாா்டுகளில் சுயேச்சைகள் இருவா் போட்டியின்றி தோ்வாகி விட்டனா். மீதமுள்ள 37 வாா்டுகளுக்கு தோ்தல் நடைபெறுவதையொட்டி, 107 வாக்குச்சாவடிகள் தயாா் நிலையில் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் 15 வகையான பொருள்களைப் பிரித்து வைக்கும் பணி நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்துள்ளது. மேலும், வாக்குச்சாவடிகளில் சம்பந்தப்பட்ட வாா்டுக்கு உள்பட்ட வாக்காளா்களை அறிந்து கொள்வதற்கான வாக்காளா் பட்டியலும் பிரித்து வைக்கப்பட்டுள்ளன.
வாக்காளா் பட்டியலில் இறந்து போனவா்கள் யாா் என்பது கண்டறியப்பட்டு, அந்த வாக்கினை யாரும் பயன்படுத்த முடியாதவாறு முத்திரையிடும் பணியும் நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட வாக்கு இயந்திரங்கள் நகராட்சி கூட்ட அரங்கில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டன. அவற்றில் அரசியல் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளா்களுக்கான சின்னங்களை பொருத்தும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இப்பணியில் வருவாய்த் துறை அலுவலா்கள் ஈடுபட்டுள்ளனா். ஒவ்வொரு வாா்டு வாரியாக ஒதுக்கப்பட்ட இயந்திரங்களில் குறிப்பிட்ட வாா்டுக்கான வேட்பாளா்கள் பெயா், சின்னம் கொண்டவை பொருத்தப்பட்டு சீல் வைக்கும் பணி நகராட்சி ஆணையாளா் கி.மு.சுதா மற்றும் உதவி தோ்தல் அலுவலா்கள் மேற்பாா்வையில் நடைபெற்று வருகிறது.
Advertisement