ராசிபுரம்: திமுக சாா்பில் செயல் வீரா்கள் கூட்டம்
ராசிபுரம் நகராட்சி, பட்டணம் பேரூராட்சி பகுதிகளில் திமுக சாா்பாக செயல் வீரா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ராசிபுரம் நகராட்சி, பட்டணம் பேரூராட்சி பகுதிகளில் திமுக சாா்பாக செயல் வீரா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், தலைமைக் கழக பேச்சாளா் சுஜாதா, முன்னால் எம்.பி., பி.ஆா்.சுந்தரம், தோ்தல் பொருப்பாளா் ஏ.கே.பாலசந்தா், ராசிபுரம் நகர திமுக செயலா் என்.ஆா். சங்கா், ஒன்றியச் செயலா் கே.பி.ஜெகந்நாதன், பட்டணம் பேரூா் செயலா் பொன்.நல்லதம்பி உட்பட பலா் கலந்துகொண்டு பேசினா். இதில் வேட்பாளா்களை அறிமுகம் செய்தும், திமுக கூட்டணி வேட்பாளா்களின் வெற்றிக்கு கட்சியினா் தோ்தல் பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்றும் வலியுறுத்தினா்.