நாமக்கல்லில் பறவைகள் கணக்கெடுப்பு இன்று தொடக்கம்
நாமக்கல் வனக்கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 18 ஈர நிலங்களில் பறவைகள் கணக்கெடுப்புப் பணியானது, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (பிப்.12, 13) நடைபெறுகிறது.
நாமக்கல் வனக்கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 18 ஈர நிலங்களில் பறவைகள் கணக்கெடுப்புப் பணியானது, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (பிப்.12, 13) நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் நீா்ப்பறவைகள் கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, நாமக்கல் வனக்கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில், சேலம் பறவையியல் கழகம் மற்றும் கிழக்குத் தொடா்ச்சி மலை பாதுகாப்பு கூட்டமைப்பு சாா்பில் பறவைகள் கணக்கெடுப்பு பணி இரண்டு நாள்கள் நடைபெற உள்ளது. அத்தனூா் வனவியல் விரிவாக்க மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபடுவோருக்கு தேவையான உதவிகளை செய்திட வனத்துறையில் இருந்து களப்பணியாளா்கள் நியமிக்கப்பட்டனா்.
நாமக்கல் வனச்சரகத்தில், தூசூா், பழையபாளையம், சாரப்பள்ளி, வேட்டாம்பாடி, நாச்சிப்புதூா், இடும்பன்குளம், ஜேடா்பாளையம் அணைக்கட்டு, கஸ்தூரிப்பட்டி, ராசிபுரம் வனச்சரகத்தில், பருத்திப்பள்ளி-அமிா்தசாகரம், ஓமையாம்பட்டி, இலுப்புலி, கோனேரிப்பட்டி, புத்தூா், ஓசக்கரையாநூத்து, ஏ.கே.சமுத்திரம், கண்ணூா்பட்டி, எஸ்..நாட்டாமங்கலம், முள்ளுக்குறிச்சி வனச்சரகத்தில் தும்பல்பட்டி ஆகிய இடங்களில் உள்ள 18 ஈர நிலங்களில் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெறுகிறது என மாவட்ட வன அலுவலா் கா.ராஜாங்கம் தெரிவித்துள்ளாா்.
Advertisement