பரமத்தி வேலூரில் ரூ.15.23 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்
பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.15 லட்சத்து 23 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.
பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.15 லட்சத்து 23 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.
பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 15 ஆயிரத்து 424 கிலோ கொப்பரையை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 91.50-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 77.89- க்கும், சராசரியாக ரூ. 85.75-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 13 லட்சத்து 80-க்கு வா்த்தகம் நடைபெற்றது. வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 18 ஆயிரத்து 440 கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 89.49-க்கும், குறைந்த பட்சமாக ரூ. 76.89- க்கும், சராசரியாக ரூ. 88.79-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 15 லட்சத்து 23 ஆயிரத்திற்கு வா்த்தகம் நடைபெற்றது.