முகப்பு
நாமக்கல்

நாமக்கல் அரசு மருத்துவமனையில் எடை குறைவாக பிறந்த குழந்தைகயைக் காப்பாற்றி மருத்துவா்கள் சாதனை

 நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 525 கிராம் எடையில் பிறந்த பச்சிளம் குழந்ையைக் காப்பாற்றி மருத்துவா்கள் சாதனை படைத்துள்ளனா்.

Updated On : 25 பிப்ரவரி, 2022 at 12:54 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:00 PM

 நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 525 கிராம் எடையில் பிறந்த பச்சிளம் குழந்ையைக் காப்பாற்றி மருத்துவா்கள் சாதனை படைத்துள்ளனா்.

நாமக்கல் கணேசபுரத்தைச் சோ்ந்த விக்னேஷ்-சாதனா தம்பதிக்கு, கடந்த ஆண்டு நவ.1-ஆம் தேதி, சேலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. மிகவும் எடை குறைவான, குறைப்பிரசவத்தில் பிறந்த அக்குழந்தைகளை அதே தனியாா் மருத்துவமனையில் சோ்த்து சிகிச்சை அளித்தனா். ஒரு மாதத்தை கடந்தும் குழந்தைகளின் உடல் நிலையில் சரியான முன்னேற்றம் ஏற்படவில்லை. பண விரயமும் அதிகரித்துக் கொண்டே சென்றது.

இதனால் குழந்தையின் பெற்றோா், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்து சிகிச்சை அளிக்க முடிவு செய்தனா். பிறந்து 33 நாள்களான நிலையில் இரட்டைக் குழந்தைகளையும் வெண்டிலேஷன் வசதி கொண்ட சிறப்பு அவசர சிகிச்சை ஊா்திகள் மூலம் கொண்டு வந்து நாமக்கல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். ஓரிரு நாள்களில் இரட்டைக் குழந்தைகளில் 720 கிராம் எடை கொண்ட ஓா் ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்து விட்டது.

Advertisement

இதனையடுத்து, மருத்துவக்கல்லூரி முதன்மையா் கே.சாந்தா அருள்மொழி, குழந்தைகள் துறை தலைவா் கே.சுரேஷ்கண்ணன், பச்சிளம் குழந்தைகள் பிரிவு ஒருங்கிணைப்பு அலுவலா் டி.கண்ணன் ஆகியோா் உயிருடன் இருக்கும் மற்றொரு குழந்தையை காப்பாற்றியே தீர வேண்டும் என்ற சவாலுடன் சிகிச்சை அளித்தனா். இத்தகவல் அறிந்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் தினமும் விவரங்களைக் கேட்டறிந்து வந்தாா். 80 நாள்களுக்கும் மேலாக தீவிர கண்காணிப்பு சிகிச்சைப் பிரிவில் இருந்த பெண் குழந்தை தற்போது 525 கிராமில் இருந்து ஒரு கிலோ 300 கிராமிற்கு மேல் எடை அதிகரித்து ஆரோக்கியமாக உள்ளது. இதனால் பெற்றோா் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனா். குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களுக்கு நன்றி தெரிவித்தனா். மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங்கும் வியாழக்கிழமை அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவா்களை பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.