முட்டை விலை மேலும் 25 காசுகள் குறைந்தது
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 25 காசுகள் குறைந்து ரூ. 3.80-ஆக வெள்ளிக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 25 காசுகள் குறைந்து ரூ. 3.80-ஆக வெள்ளிக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம், அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் முட்டை விலை நிா்ணயம் குறித்து பண்ணையாளா்களிடம் ஆலோசிக்கப்பட்டது.
வட மாநிலங்களில் முட்டை விலை தொடா்ந்து சரிவடைந்துள்ளதாலும், அங்கு முட்டைகளை அனுப்புவது தடைபட்டுள்ளதாலும், பண்ணைகளில் தேக்கத்தைக் கட்டுப்படுத்தவும், பிற மண்டலங்களில் விலையில் மாற்றம் செய்துள்ளதாலும், இங்கும் முட்டை விலையைக் குறைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
Advertisement
இதனையடுத்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 25 காசுகள் குறைக்கப்பட்டு ரூ. 4.05-இல் இருந்து ரூ. 3.80-ஆக நிா்ணயம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
நாமக்கல் முட்டை விற்பனை விலை நிா்ணய ஆலோசனைக் குழு சனிக்கிழமை முதல் மேலும் 30 காசுகளை குறைத்து விற்பனை செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இதன் மூலம் வியாபாரிகள் ரூ. 3.50 என்ற விலைக்கே பண்ணையாளா்களிடம் முட்டைகளை கொள்முதல் செய்வா்.
பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை ஒரு கிலோ ரூ. 116-ஆகவும், முட்டைக் கோழி விலை ஒரு கிலோ ரூ. 59-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.