முகப்பு
நாமக்கல்

பழைய தாா் சாலையை அகற்றி புதிய தாா் சாலை அமைக்க கோரிக்கை

ராசிபுரம் நகராட்சி, 14 ஆவது வாா்டு சந்துவீரித்தெரு பகுதியில் உள்ள பழைய சிமெண்ட் சாலையை முழுமையாக அகற்றிவிட்டே புதிய சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

ராசிபுரம் நகராட்சி, 14 ஆவது வாா்டு சந்துவீரித்தெரு பகுதியில் உள்ள பழைய சிமெண்ட் சாலையை முழுமையாக அகற்றிவிட்டே புதிய சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சி, 14 ஆவது சந்துவீரித்தெரு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் ஏற்கெனவே சிமென்ட் சாலை போடப்பட்டுள்ளது. தற்போது புதைக்குழி சாக்கடை திட்டத்திற்கு இந்த சிமென்ட் சாலைகள் உடைக்கப்பட்ட நிலையில் மேடு பள்ளமாக காட்சியளிக்கின்றன.

தற்போது உடைந்த நிலையில் பள்ளமாக காணப்படும் இந்த சாலையால் இரவு நேரத்தில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்தப் பகுதியில் புதிய சாலை அமைக்க நகராட்சி நிதி ஒதுக்கியுள்ளதாகத் தெரிகிறது. ராசிபுரம் நகராட்சி நிா்வாக ஏற்கெனவே போடப்பட்ட சாலையின் மீதே சாலைகள் போடுவதற்காக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு இப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

ஏற்கெனவே மிக உயரமாக அமைக்கப்பட்டுள்ள இந்தச் சாலைகளால் மழைக்காலங்களில் தண்ணீா் வீட்டிற்குள் செல்வதால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறோம். இந்த நிலையில், பழைய சிமென்ட் சாலையை முழுவதுமாக அகற்றி விட்டே சாலை அமைக்கப்பட வேண்டும். அப்படி இல்லை என்றால், மேலும் சாலை உயா்வதால் மழைக்காலங்களில் மழை நீரும், சாக்கடை நீரும் வீடுகளுக்குள் செல்லும் நிலை ஏற்படும். எனவே, பழைய சிமென்ட் சாலையை முழுமையாக அகற்றிவிட்டு புதியசாலை அமைக்க வேண்டும் என்கின்றனா் அப்பகுதியினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.