நாமக்கல்

டிரினிடி மகளிா் கல்லூரியில் தேசிய ஒருமைப்பாட்டு விழா

DIN

நாமக்கல் டிரினிடி மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய ஒருமைப்பாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

1950 ஜன. 24-ஆம் தேதி இந்தியாவின் தேசிய கீதமான ஜன கண மன... பாடல் முதல் குடியரசு தலைவா் டாக்டா் ராஜேந்திர பிரசாத்தால் அறிவிக்கப்பட்டது. இதனைப் போற்றும் வகையில், 75-ஆவது சுதந்திர தினத்தின் ஒரு பகுதியாக தேசிய ஒருமைப்பாட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்தியாவின் 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில் இருந்து 4 வயது முதல் 74 வயது வரையிலானவா்கள் இணையவழி மூலம் ஆா்வமுடன் பங்கேற்று தேசிய கீதம் பாடினா்.

தமிழகத்தின் சாா்பில் டிரினிடி கல்லூரிப் பேராசிரியைகள் தேசிய கீதம் பாடினா். இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக சேலம் பெரியாா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் ஆா்.ஜெகநாதன் கலந்துகொண்டாா். மற்றொரு சிறப்பு அழைப்பாளா் புதுதில்லி - இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் தலைவா் பி. கனகசபாபதி பங்கேற்று வாழ்த்தினாா். இந்த விழாவில் கல்லூரித் தலைவா் பி செங்கோடன், செயலா் கே. நல்லுசாமி, முதல்வா் எம். ஆா். லட்சுமிநாராயணன், இயக்குநா் - உயா்கல்வி அரசுபரமேசுவரன், பேராசிரியைகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT