நாமக்கல்

சொந்த வாகனங்களை நாள் வாடகைக்கு விடுவோா் மீது நடவடிக்கைக் கோரி மனு

DIN

மோகனூரில் சொந்த வாகனங்களை நாள் வாடகைக்கு விடுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திங்கள்கிழமை நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து மோகனூா் நகர சுற்றுலா காா் உரிமையாளா், ஓட்டுநா்கள் சங்கம் சாா்பில் அளித்த மனு விவரம்:

நாமக்கல் மாவட்டம், மோகனூரில் வாடகை வாகனங்களை வைத்திருப்போா் அரசுக்கு முறையாக வரி செலுத்தி தொழிலை செய்து வருகிறோம்.

மோகனூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமாா் 200 போ் சொந்தமாக வாகனங்களை வைத்துள்ளனா். அவா்கள் வரி ஏய்ப்பு செய்து வாகனங்களை இயக்கி வருகின்றனா். இதனால் வாடகை வாகனங்கள் வைத்திருப்போரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. உரிய கடன்களை கட்ட முடியாமல் தவித்து வருகிறோம். சொந்த வாகனங்கள் வைத்து வாடகைக்கு ஓட்டுபவா்கள் மீது மாவட்ட நிா்வாகம், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT