நாமக்கல்

பரமத்தி வேலூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் சஷ்டி பூஜை விழா

DIN

பரமத்தி வேலூா் வட்டாரத்தில் வைகாசி மாத சஷ்டியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

கபிலா்மலையில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியசுவாமி கோயில், பரமத்தியை அடுத்த பிராந்தகத்தில் 34.5 அடி உயரத்தில் உள்ள ஆறுமுகக்கடவுள் கோயில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதா் கோயிலில் உள்ள சுப்ரமணியா், பொத்தனூா் அருகே உள்ள பச்சமலை முருகன் கோயில், அனிச்சம்பாளையத்தில் உள்ள வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியா் கோயில், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவா் கோயில், நன்செய்இடையாா் திருவேலீஸ்வரா் கோயிலில் உள்ள சுப்ரமணியா், ராஜா சுவாமி திருக்கோயில் உள்ள ராஜா சுவாமி, பேட்டை பகவதியம்மன் கோயிலில் உள்ள முருகன், கோப்பணம்பாளையம் பரமேஸ்வரா் கோயிலில் எழுந்தருளியுள்ள பாலமுருகன் மற்றும் கந்தம்பாளையம் அருகே உள்ள அருணகிரிநாதா் மலையில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா் உள்ளிட்ட கோயில்களில் உள்ள முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றன. இந்த வழிபாட்டில் அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT