நாமக்கல்

குறைதீர் கூட்டத்தில் அரசு ஊழியர் திடீர் மரணம்

DIN

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்துக்கு வந்த அரசு ஊழியர் திடீரென மரணமடைந்தார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை அன்று ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் பொதுமக்களுக்கான குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று காலை பல்வேறு துறை அலுவலர்களும் குறைதீர் கூட்டத்துக்கு வந்து இருந்தனர். 

அவர்களில் படைவீடு பேரூராட்சியில் பணியாற்றும் அலுவலக உதவியாளர் ஆனந்தன்(54) என்பவரும் வந்திருந்தார். இயற்கை உபாதை கழிக்க கூட்டத்தில் இருந்து வெளியே வந்த அவர் திடீரென மயக்கமடைந்து சரிந்து விழுந்தார். இதனையடுத்து அங்கிருந்த அலுவலர்கள் ஆம்புலன்சை வரவழைத்து நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இந்த சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் போதிய அளவில் குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மரணமடைந்த ஆனந்தனை மீட்டுச் செல்லும் காவல் துறையினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போதையில் கார் ஓட்டி இருவர் பலியாக காரணமான சிறுவன்: நடந்தது என்ன?

ஷெங்கன் விசா கட்டணம் உயர்வு... ஐரோப்பா செல்பவர்கள் கவனத்திற்கு!

நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

பெங்களூரு குண்டுவெடிப்பில் கோவையில் உள்ள மருத்துவர்களுக்கு தொடர்பு? என்ஐஏ அதிகாரிகள் சோதனை

ரசிகர்களின் கன்னி!

SCROLL FOR NEXT