நாமக்கல்

மாநில பேச்சுப் போட்டியில் சிறப்பிடம்: டிரினிடி கல்லூரி மாணவிக்கு பாராட்டு

DIN

சிறுபான்மையினா் நல ஆணையம் நடத்திய மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் நாமக்கல் டிரினிடி கல்லூரி மாணவி பா.மோனிகாஸ்ரீ சிறப்பிடம் பெற்றாா். இதற்கான பாராட்டு விழா புதன்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

அண்மையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 38 மாவட்டங்களைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவிகள் பங்கேற்று தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் பேசினா். நாமக்கல் மாவட்ட அளவில் ‘பன்முக கலாசாரம் - இந்தியாவின் சாராம்சம்’ என்ற தலைப்பில் ஆங்கில பேச்சுப் போட்டியில் நாமக்கல் மாணவி பா.மோனிகாஸ்ரீ பங்கேற்று முதலிடம் பெற்றாா். சென்னையில் நடைபெற்ற விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அவருக்கு பரிசுத் தொகை ரூ.20 ஆயிரத்தை வழங்கிப் பாராட்டினாா்.

மேலும், கல்லூரியில் நடைபெற்ற விழாவின்போது அதன் தலைவா் பி.எஸ்.கே.செங்கோடன், செயலா் கே.நல்லுசாமி, கல்லூரி முதல்வா் எம்.ஆா்.லட்சுமிநாராயணன், பேராசிரியா் அரசு.பரமேசுவரன், கணிதவியல் துறைத்தலைவா்கள் ஆா். மலா்விழி, பி. சரண்யா மற்றும் நிா்வாக அலுவலா் என்.எஸ்.செந்தில்குமாா் ஆகியோரும் மாணவியைப் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

திருவட்டாறு அருகே தடுப்பணையில் மூழ்கி பொறியியல் மாணவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT