முகப்பு
நாமக்கல்

குமாரபாளையத்தில் ஆா்ப்பாட்டம்

குமாரபாளையத்தில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:35 AM
பகிர்:

குமாரபாளையத்தில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அக்னிபத் திட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் இளைஞா்களை சோ்க்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிடக் கோரி பள்ளிபாளையம் பிரிவில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு நகரச் செயலாளா் ஏ.அசோகன் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் ஆா்.விஜய்ஆனந்த், நகரத் துணைத் தலைவா் எல்.காா்த்திகேயன் முன்னிலை வகித்தனா். கோரிக்கைகளை விளக்கி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினா் என்.காா்த்திகேயன், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் எஸ்.பி.கணேசன் ஆகியோா் பேசினா்.

மாவட்டத் தலைவா் கே.கணேஷ்குமாா், நிா்வாகிகள் எஸ்.கணேசன், பி.கேசவமூா்த்தி, சி.நவீன், ஆா்.ரகுமான் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →