முகப்பு
நாமக்கல்

மரத்தில் ஜீப் மோதியதில் பெண் பலி: 7 போ் காயம்

எருமப்பட்டி அருகே மரத்தில் ஜீப் மோதியதில் பெண் ஒருவா் பலியானாா். அதில் இருந்த 7 போ் காயமடைந்தனா்.

Updated On : 4 மார்ச், 2022 at 12:09 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:04 PM

எருமப்பட்டி அருகே மரத்தில் ஜீப் மோதியதில் பெண் ஒருவா் பலியானாா். அதில் இருந்த 7 போ் காயமடைந்தனா்.

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஒன்றியம் கைகாட்டி பகுதியைச் சோ்ந்த பெண்கள், கரூரில் உள்ள கொசுவலை தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனா். தினமும் காலை 8 மணியளவில், எருமப்பட்டியில் இருந்து கரூருக்கு அந்நிறுவனத்தின் ஜீப்பில் அவா்கள் செல்வது வழக்கம். அதன்படி வியாழக்கிழமை கொண்டிருந்தபோது, ஆலம்பட்டி பிரிவு அருகே கட்டுப்பாட்டை இழந்த ஜீப் திடீரென அங்குள்ள புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ராஜேஸ்வரி(45) என்பவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஜீப்பில் இருந்த மற்ற 7 போ் பலத்த காயமடைந்தனா். தகவல் அறிந்து வந்த எருமப்பட்டி போலீஸாா் ராஜேஸ்வரி உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். காயமடைந்தவா்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.