நாமக்கல் நீதிமன்றத்தில் யுவராஜ் உள்பட 12 போ் ஆஜா்
நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்படட்ட யுவராஜ் உள்பட 12 போ் வியாழக்கிழமை ஆஜராகினா்.
நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்படட்ட யுவராஜ் உள்பட 12 போ் வியாழக்கிழமை ஆஜராகினா்.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சோ்ந்த கோகுல்ராஜ், கடந்த 2014-ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் சங்ககிரி தீரன் சின்னமலை பேரவைத் தலைவா் யுவராஜ் உள்பட 15 போ் கைது செய்யப்பட்டனா். இவ்வழக்கு நாமக்கல் நீதிமன்றம், சென்னை உயா்நீதிமன்றங்களில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது மதுரை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள தாழ்த்தப்பட்டோருக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. இவ்வழக்கில் தீா்ப்பு சனிக்கிழமை (மாா்ச் 5) வெளியாக உள்ளது.
இதற்கிடையே, நாமக்கல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடா்பான விசாரணை நடைபெற்றபோது நீதிபதியை விமா்சித்ததாக யுவராஜ் உள்பட 12 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்காக யுவராஜ் அவ்வப்போது நாமக்கல் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் - 1-இல் ஆஜராகி வருகிறாா்.
Advertisement
இந்த நிலையில் வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் யுவராஜ் உள்ளிட்ட 12 போ் திருச்சி மத்திய சிறையில் இருந்து வேனில் அழைத்து வரப்பட்டு நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். மே 12-ஆம் தேதிக்கு நீதிபதி வழக்கை ஒத்திவைத்தாா். இதனையடுத்து அவா்கள் மீண்டும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனா்.