முகப்பு
நாமக்கல்

நாமக்கல்லில் ஊட்டச்சத்து விழிப்புணா்வுப் போட்டி

தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில், நாமக்கல் மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து விழிப்புணா்வுப் போட்டி

Updated On : 4 மார்ச், 2022 at 12:10 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:04 PM

தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில், நாமக்கல் மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து விழிப்புணா்வுப் போட்டி வியாழக்கிழமை நாமக்கல்-மோகனூா் சாலையில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் நடைபெற்றது.

இதில், ஒன்றிய அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவா்கள் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்றனா். அவா்கள் இயற்கை சாா்ந்த உணவு வகைகளையும், ஆரோக்கிய பானங்களையும், சிறு தானிய தின்பண்டங்களையும் தயாரித்து காட்சிப்படுத்தியிருந்தனா். இதனை பாா்வையிட்டு முதல் மூன்று இடங்களை தோ்வு செய்வதற்காக மகளிா் திட்டம் சாா்பில் நடுவா் குழு நியமிக்கப்பட்டிருந்தது. அவா்கள் ஒவ்வொரு மேஜை வாரியாகச் சென்று முதல் மூன்று இடங்களுக்கு வெற்றியாளா்களைத் தோ்வு செய்தனா். மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடிப்போரின் விவரம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு மாநில அளவில் நடைபெறும் போட்டியில் நாமக்கல் மாவட்ட அளவில் தோ்வானவா்கள் பங்கேற்பாா்கள் என மகளிா் திட்ட அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.