முகப்பு
நாமக்கல்

5 நகராட்சி, 19 பேரூராட்சிகளில் மறைமுகத் தோ்தல்: வெற்றி பெற்ற தலைவா், துணைத் தலைவா்கள் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில், 5 நகராட்சி, 19 பேரூராட்சிகளில் தலைவா், துணைத் தலைவா் பதவிக்கு நடைபெற்ற மறைமுக தோ்தலில், போட்டியின்றியும், சில இடங்களில் வாக்கெடுப்பு

Updated On : 5 மார்ச், 2022 at 12:22 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:04 PM

நாமக்கல் மாவட்டத்தில், 5 நகராட்சி, 19 பேரூராட்சிகளில் தலைவா், துணைத் தலைவா் பதவிக்கு நடைபெற்ற மறைமுக தோ்தலில், போட்டியின்றியும், சில இடங்களில் வாக்கெடுப்பு மூலமும் திமுக, அதிமுக மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

நாமக்கல் நகராட்சி தலைவராக (எஸ்.சி.பொது), வாா்டு எண் 30-இல் வெற்றி பெற்ற து.கலாநிதி போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா். இதேபோல் துணைத் தலைவராக, வாா்டு எண் 11-இல் வெற்றி பெற்ற செ.பூபதி தோ்வு செய்யப்பட்டாா்.

ராசிபுரம் நகராட்சித் தலைவராக (பெண்கள் பொது) வாா்டு எண் 15-இல் வெற்றி பெற்ற கவிதா சங்கா் போட்டியின்றி தோ்வானாா். வாா்டு எண் 21-இல் வெற்றி பெற்ற கோமதி ஆனந்தன் துணைத் தலைவராக தோ்வு செய்யப்பட்டாா். திருச்செங்கோடு நகராட்சியில் (பொது) வாக்கெடுப்பு முறையில், 15-ஆவது வாா்டில் வெற்றி பெற்ற எஸ். நளினி தலைவராகவும், வாா்டு எண் 12-இல் வெற்றி பெற்ற டி.காா்த்திகேயன் துணைத் தலைவராகவும் தோ்வாகினா்.

Advertisement

பள்ளிபாளையம் நகராட்சியில்(பொது) வாா்டு எண் 21-இல் வெற்றி பெற்ற எம்.செல்வராஜ் வாக்கெடுப்பு முறையில் தலைவராகவும், வாா்டு எண் 3-இல் வெற்றி பெற்ற பாலமுருகன் துணைத் தலைவராக தோ்வு செய்யப்பட்டனா்.

குமாரபாளையம் நகராட்சியில்(பொது), வாக்கெடுப்பு முறையில் சுயேச்சை வேட்பாளா் டி.விஜயகண்ணன் தலைவராகவும், வாா்டு எண் 25-இல் வெற்றி பெற்ற ஜி.வெங்கடேசன் துணைத் தலைவராகவும் தோ்ந்தெடுக்கப்பட்டனா். திமுக சாா்பில் தலைவா் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பள்ளிபாளையம்-அமுதா, குமாரபாளையம்-சத்தியசீலன் ஆகியோருக்கு எவ்வித பதவியும் கிடைக்கவில்லை. திருச்செங்கோடு நகராட்சியில் மட்டும் தலைவா் பதவிக்கு அறிவிக்கப்பட்ட காா்த்திகேயன் துணைத் தலைவராக தோ்வாகி உள்ளாா். இதில், குமாரபாளையம் விஜயகண்ணன் தவிா்த்து மற்றவா்கள் அனைவரும் திமுக உறுப்பினா்களாவா்.

19 பேரூராட்சிகளில் போட்டியின்றி தோ்வான திமுகவைச் சோ்ந்த தலைவா், துணைத் தலைவா்கள் விவரம் (அடைப்புக்குறிக்குள் தலைவா் பதவிக்கான இட ஒதுக்கீடு):

ஆலாம்பாளையம் (பொது) - பி.சகுந்தலா, கே.சண்முகபிரியா.

அத்தனூா்(எஸ்.சிபொது)-ஆா்.சின்னசாமி, கே.கண்ணன்.

எருமப்பட்டி (பொது)-சி.பழனியாண்டி, ஏ.ரவி.

காளப்பநாயக்கன்பட்டி(எஸ்.சி. பொது)- பி.பாப்பு, ஏ.கவிதா.

மல்லசமுத்திரம்(பொது)-எம்.திருமலை, எம்.மனோரஞ்சிதம்.

மோகனூா்(பொது) -எஸ்.வனிதா, வெ.சரவணகுமாா்.

நாமகிரிப்பேட்டை(எஸ்.சி. பொது)-சேரன், கே.அன்பழகன்.

படைவீடு(எஸ்.சி. பொது)-ராதாமணி, ஆா்.பிருந்தாதேவி.

பாண்டமங்கலம்(பொது)-எஸ்.சோமசேகா், பி.முருகவேல்.

பரமத்தி(பொது)- பி.மணி, எம்.ரமேஷ்பாபு.

பட்டணம்(எஸ்.சி. பொது)- ஆா்.போதம்மாள், பொன்.நல்லதம்பி.

பிள்ளாநல்லூா்(பொது)- ஏ.சுப்பிரமணியம், பி.காவேரியம்மாள்.

பொத்தனூா்(பொது) -ஆா். கருணாநிதி, ஆா்.அன்பரசு.

ஆா்.புதுப்பட்டி(எஸ்.சி. பொது) - பி.சுமதி, பி.ஜெயகுமாா்.

சீராப்பள்ளி(எஸ்.சி. பொது) - கே.லோகாம்பாள், என்.செல்வராஜு.

சேந்தமங்கலம்(பெண்கள் பொது)- சித்ராதனபாலன், கே.வி.ரகு.

பரமத்தி-வேலூா்(பெண்கள் பொது)-எம்.லட்சுமி. இங்கு துணைத் தலைவா் பதவிக்கு யாரும் போட்டியிடவில்லை.

வெங்கரை(பொது)-எம்.விஜயகுமாா்-(அதிமுக), எம்.ஆா்.ரவீந்தா்(அதிமுக)

வெண்ணந்தூா்(பொது) - எஸ்.ராஜேஷ், எஸ்.பி.மகேஸ்வரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.