நாமக்கல்

வெப்ப அயா்ச்சியால் கோழிகள் இறப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

DIN

நாமக்கல் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகாரிப்பால் கோழிகள் அயா்ச்சி நோயால் இறக்க நேரிடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த வார வானிலையைப் பொருத்தமட்டில், பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 102.2 மற்றும் 67.1 டிகிரியாக நிலவியது. கடந்த நான்கு நாட்களில் மழை எங்கும் பதிவாகவில்லை.

இனி வரும் நான்கு நாட்களுக்கான மாவட்ட வானிலை: முதல் நாளில் வானம் தெளிவாகவும், அடுத்து வரும் நாள்களில் லேசான மழையும் காணப்படும். பகல் வெப்பம் 102 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 73.4 டிகிரியாகவும் காணப்படும். காற்றின் திசை பெரும்பாலும் தெற்கு மற்றும் தென்மேற்கிலிருந்து மணிக்கு 6 கி.மீ வேகத்தில் வீசும்.

சிறப்பு ஆலோசனை: கடந்த வாரம் இறந்த கோழிகளை ஆய்வு செய்ததில் பெரும்பாலானவை வெப்ப அயா்ச்சி காரணமாக இறந்திருப்பது தெரியவந்துள்ளது. கோடைகால பராமரிப்பு முறைகளைக் கையாள வேண்டும். கோழிகளுக்கு தீவனத்தில் வைட்டமின்-சி, நுண்ணூட்டச் சத்துக்களை உபயோகிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

SCROLL FOR NEXT