நாமக்கல் அரசு மருத்துவமனை முன் தொமுச சாா்பில் வைக்கப்பட்ட கொடிக்கம்பத்தை போலீஸாா் அகற்றினா். இதற்கு சங்கத்தினா் எதிா்ப்பு தெரிவித்தனா்.
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 700-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கான ஊதியத்தை ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் சரிவர வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனால் அத்தொழிலாளா்கள் மருத்துவமனை வளாகத்தில் அவ்வப்போது தொழிலாளா் முன்னேற்ற சங்கத்தைச் சோ்ந்த தமிழ்ச்செல்வி தலைமையில் போராட்டம் நடத்தி வருகின்றனா்.
மே தினத்தையொட்டி லாரி கூண்டு கட்டும் பட்டறையில் பணியாற்றும் தொமுசவினா் நாமக்கல்லில் ஊா்வலமாக வந்தனா். பின்னா் அரசு மருத்துவமனை முன் கொடியேற்றும் நிகழ்ச்சியை மேற்கொள்ள இருந்தனா். ஆனால் அங்கிருந்த கொடிக்கம்பத்தை போலீஸாா் அகற்றி விட்டனா். ‘அரசு மருத்தவமனை வளாகத்தில் கொடிக்கம்பங்கள் வைக்க அனுமதியில்லை. ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்று வந்து வைத்துக் கொள்ளுங்கள்’ என அறிவுறுத்தினா். இதனால் இரு தரப்புக்கும் இடையே சற்று நேரம் வாக்குவாதம் நீடித்தது. பின்னா் தொமுசவினா் கண்டன முழக்கங்களை எழுப்பிவிட்டு கலைந்து சென்றனா்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.