நாமக்கல்

முட்டை விலை மாற்றமின்றி ரூ. 3.80-ஆக நீடிப்பு

DIN

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 3.80-ஆக ஞாயிற்றுக்கிழமை நீடித்தது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், முட்டை விலை நிலவரம் தொடா்பாக பண்ணையாளா்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன. பிற மண்டலங்களில் விலையில் எவ்வித மாற்றமும் செய்யாததாலும், மக்களிடையே முட்டை நுகா்வு சீராக இருப்பதாலும், விலையில் மாற்றம் செய்யாமல் ரூ. 3.80-இல் நீடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலையில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

நாமக்கல் முட்டை விற்பனை விலை நிா்ணய ஆலோசனைக் குழு முடிவில், வழக்கம்போல் 30 காசுகள் குறைவாக வைத்து முட்டைகளை வியாபாரிகளுக்கு பண்ணையாளா்கள் விற்பனை செய்யலாம் என தெரிவித்துள்ளது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 110-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 75-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 4 பேர் பலி

அதிக வருவாய் ஈட்டும் முதல் 10 ரயில் நிலையங்களில் தமிழ்நாடு முதலிடம்: தெற்கு ரயில்வே

கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள் கைது!

குருதியை வியர்வையாக்கி உலகை உயர்த்தும் உழைப்பாளர்கள்: மு.க.ஸ்டாலின்

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

SCROLL FOR NEXT