பரமத்தி வேலூரில் ரூ.16.16 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்
பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.16 லட்சத்து 16 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம் போனது.
பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.16 லட்சத்து 16 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம் போனது.
பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 19 ஆயிரத்து 510 கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 90.01-க்கும், குறைந்த பட்சமாக ரூ. 78.15-க்கும், சராசரியாக ரூ. 88.39-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.16,97,76-க்கு ஏலம் போனது.
இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 18 ஆயிரத்து 638 கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 89.29-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 75.35- க்கும், சராசரியாக ரூ. 88.69-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 16,16, 682 -க்கு ஏலம் போனது. கொப்பரையின் விலை சரிவடைந்ததால் தென்னை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.