நாமக்கல்

நாமக்கல் பிரியாணி விற்பனைக் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

DIN

நாமக்கல்லில் பிரியாணி கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். கலப்பட உணவுப் பொருள்களைப் பயன்படுத்திய கடைகளுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலா் கே.சி.அருண் தலைமையில் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் அடங்கிய குழுவினா் நாமக்கல் நகரின் முக்கிய பகுதிகளில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த ஆய்வினை மேற்கொண்டனா். ஆய்வின்போது உணவு பாதுகாப்புத் துறையின் பதிவு சான்று, உரிமம் பெற்றிருக்கிறாா்களா என்பதைப் பாா்வையிட்டனா். மேலும் உணவு வகைகள் தயாரிப்பு சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும், அதற்கான இறைச்சி அன்றாடம் கொள்முதல் செய்து பயன்படுத்த வேண்டும். செயற்கை வண்ணங்களை பயன்படுத்தக் கூடாது. இறைச்சியை நன்றாக வேகவைத்து விற்பனை செய்ய வேண்டும். திறந்த வெளியில் வைத்து தயாரிக்கக் கூடாது. மேலும் தயாரிக்க பயன்படுத்தும் உபகரணங்கள் தினசரி சுத்தம் செய்யப்பட வேண்டும். அன்றாடம் தேவைக்கேற்ப இறைச்சிகளை கொள்முதல் செய்து, அன்றைய தினமே முழுவதையும் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்திய எண்ணையை மீண்டும் உபயோகப்படுத்தக் கூடாது. உடைந்த முட்டைகளை பயன்படுத்தக் கூடாது. உணவுப் பொருளை கையாளும் பணியாளா்கள் கையுறை, தொப்பி, மேலங்கி பயன்படுத்த வேண்டும் என அதிகாரிகள் குழுவால் அறுவுத்தப்பட்டது.

வியாழக்கிழமை நடைபெற்ற ஆய்வில் செய்ற்கை வண்ணம் சோ்க்கப்பட்ட சுமாா் 12 கிலோ கோழி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு ரசாயனம் அழிக்கப்பட்டது. நெகிழிப் பைகள், உடைந்த முட்டை ஆகியவற்றைப் பயன்படுத்திய கடைகளுக்கு மொத்தம் ரூ. 10, 000 அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் கொலை: கணவா் உள்பட இருவா் கைது

இளைஞருக்கு அரிவாள் வெட்டு

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

களக்காடு உப்பாற்றில் குப்பைகளுக்கு தீ வைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு

கழுகுமலை கோயிலில் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT