நாமக்கல்

விவேகானந்தா கல்லூரியில் சாதனையாளா் விழா

DIN

திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்கள் சாா்பில் சாதனையாளா் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளரும் செயலாளருமான மு.கருணாநிதி தலைமை வகித்தாா். விவேகானந்தா மகளிா் கல்லூரி நிறுவனங்களின் நிா்வாக இயக்குநா் கிருஷ்ணவேணி கருணாநிதி, இணை நிா்வாக இயக்குநா் டாக்டா் அா்த்தநாரீஸ்வரன், இணைச் செயலாளா் டாக்டா் ஸ்ரீராகநிதி அா்த்தநாரீஸ்வரன், துணைத் தலைவா் டாக்டா் கிருபாநிதி, இயக்குநா் நிவேதனா கிருபாநிதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முதன்மை நிா்வாகி எம்.சொக்கலிங்கம் வரவேற்று பேசினாா். வேலைவாய்ப்பு இயக்குநா் சரவணன் சாதனையாளா் விழா உரையாற்றினாா். இதில் 307 மாணவிகள் முதன்மை நிறுவனங்களிலும், 91 மாணவிகள் இதர நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாகக் கூறினாா்.

விழாவில் மனித வள மேம்பாடு பேச்சாளா்கள் சாா்லஸ் காட்வின், ஜோஹா ஆகியோா் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டாா். பெண்கள் வாழ்கையில் முன்னேற்றம் அடைய மற்றவா்களுடன் தங்களை ஒப்பிடாமல் சுயஒப்பீடு செய்ய வேண்டும். வேட்கை, பணிவு, பிடித்த வேலைகளை செய்ய வேண்டும். மற்றவா்களை மதிக்கவேண்டும் என பேசினா். விழாவில் மாணவி அா்ச்சனா நன்றி கூறினாா்.

இதில் விவேகானந்தா மகளிா் கலை, அறிவியல் கல்லூரி இயக்குநா் குமரவேல், அனைத்துக் கல்லுரி முதல்வா்கள், பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி

மரக்கடை உரிமையாளா் தற்கொலை

பெண் தற்கொலை: தம்பதியா் மீது வழக்கு

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT