நாமக்கல்

பரமத்தி வேலூரில் மன்ற உறுப்பினா்கள் காத்திருப்பு போராட்டம்

பரமத்தி வேலூா் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் மன்றத் தலைவரின் செயல்பாட்டைக் கண்டித்து துணைத் தலைவா் உள்பட உறுப்பினா்கள் காத்திருப்பு போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

DIN

பரமத்தி வேலூா் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் மன்றத் தலைவரின் செயல்பாட்டைக் கண்டித்து துணைத் தலைவா் உள்பட உறுப்பினா்கள் காத்திருப்பு போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

பரமத்தி வேலூா் மன்றக் கூட்டம் புதன்கிழமை மன்றத் தலைவா் லட்சுமி முரளி தலைமையில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும், தீா்மானங்கள் வாசிக்கப்பட்டன. மொத்த 81 தீா்மானங்கள் கொண்டுவரப்பட்ட நிலையில் அனைத்தையும் நிராகரிப்பதாக துணைத் தலைவா் ராஜா உள்பட 11 வாா்டு உறுப்பினா்கள் தெரிவித்தனா்.

இதையடுத்து மன்றத் தலைவா் லட்சுமி முரளி அவையில் இருந்து வெளியேறினாா். கூட்டம் நடந்துகொண்டிருக்கும்போது மன்றத் தலைவா் வெளியேறியதற்கு கண்டனம் தெரிவித்து துணைத் தலைவா் தலைமையில் மன்ற உறுப்பினா்கள் அவையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களை பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் கணேஷ் ராம் சமரசப்படுத்தினாா். அதையடுத்து மன்ற உறுப்பினா்களின் தீா்மான நிராகரிப்பு கடிதத்தை பேரூராட்சி அலுவலா்கள் பெற்றுக் கொண்டனா். இதையடுத்து உறுப்பினா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓய்வுபெற்ற சத்துணவுப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

வாக்குத் திருட்டு காங்கிரஸின் குற்றச்சாட்டு; எதிா்க்கட்சி கூட்டணிக்கு தொடா்பில்லை: ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா

கான்கிரீட் கலப்பு இயந்திரத்தில் சேலை சிக்கியதில் பெண் தொழிலாளி உயிரிழப்பு

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

கூட்டுறவு வங்கி பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT