முகப்பு
நாமக்கல்

வெற்றி விகாஸ் பள்ளி வானொலி துவக்க விழா

ராசிபுரம் வெற்றி விகாஸ் பப்ளிக் பள்ளியில் ‘வாய்ஸ் ஆஃப் வெற்றி விகாஸ்’ என்ற பெயரில் பள்ளி வானொலி துவங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

ராசிபுரம் வெற்றி விகாஸ் பப்ளிக் பள்ளியில் ‘வாய்ஸ் ஆஃப் வெற்றி விகாஸ்’ என்ற பெயரில் பள்ளி வானொலி துவங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

பள்ளி மாணவா்கள் கல்வியோடு இணைந்து தங்களின் பன்முகத் திறன்களை வளா்த்துக் கொள்ளும் விதமாக வானொலி அமைக்கப்பட்டுள்ளது. மாணவா்களின் பேச்சுத் திறன், செய்திப் பரிமாற்ற ஆற்றல், கவின் கலைகள் போன்றவற்றை வெளிப்படுத்த இது உதவும் என்ற அடிப்படையில் இது தொடங்கப்பட்டுள்ளது. பள்ளியில் நடைபெற்ற இதன் துவக்க விழாவிற்கு பள்ளியின் தலைவா் ஜி.வெற்றிச்செல்வன் தலைமை வகித்தாா்.

விழாவில் பேசிய அவா், மாணவா்கள் எத்துறையில் நுழைந்தாலும், அதில் அறிவாற்றலுடன், ஆளுமை தன்மையுடன் இருக்க வேண்டும். வெற்றி பெறுவதற்காக இலக்கை அடைய பயிற்சி, முயற்சி முக்கியம் என்றாா். இந்த நிகழ்ச்சியில் வானொலி அறிவிப்பாளா் கௌசிகா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினாா். மாணவா்கள் ‘வாய்ஸ் ஆஃப் வெற்றி விகாஸ்’ என்ற வானொலிக்கு கடவுச் சொல்லினை பயன்படுத்தி தங்களது கருத்துகளைப் பதிவேற்றம் செய்வது தொடங்கி வைக்கப்பட்டது. பள்ளியின் முதல்வா் ஜி.பி.யாமினி உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.