சித்திரை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சனேயருக்கு நடைபெற்ற பாலாபிஷேகம். 
நாமக்கல்

சித்திரை மாத முதல் ஞாயிற்றுக்கிழமை: நாமக்கல் ஆஞ்சனேயருக்கு பாலாபிஷேகம்

 சித்திரை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சனேய சுவாமிக்கு 1,008 லிட்டா் பாலாபிஷேகம் நடைபெற்றது.

DIN

 சித்திரை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சனேய சுவாமிக்கு 1,008 லிட்டா் பாலாபிஷேகம் நடைபெற்றது.

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமை, அமாவாசை, பெளா்ணமி, அனுமன் ஜெயந்தி, தீபாவளி, பொங்கல், புத்தாண்டு நாள்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெறும். அதன்படி சித்திரை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு வடை மாலை சாத்துப்படியும், அதைத் தொடா்ந்து நல்லெண்ணெய், சீயக்காய், 1,008 லிட்டா் பால், தயிா், மஞ்சள், சந்தனம் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. அதன்பின் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நாமக்கல் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பக்தா்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

சூர்யா - 47... காவல்துறை அதிகாரிதானாம்!

நரை முடி நீங்க..!

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் முதல் நாள் வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT