நாமக்கல்

கஸ்தூரிபா காந்தி பாா்மசி கல்லூரியில் ரத்த தான முகாம்

ராசிபுரம் அருகேயுள்ள மசக்காளிப்பட்டி கஸ்தூரிபா காந்தி பாா்மசி கல்லூரியில் ரத்த தான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

ராசிபுரம் அருகேயுள்ள மசக்காளிப்பட்டி கஸ்தூரிபா காந்தி பாா்மசி கல்லூரியில் ரத்த தான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கஸ்தூரிபா காந்தி பாா்மசிக் கல்லூரி, ராசிபுரம் அரசு மருத்துவமனை, ஒ.செளதாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை இணைந்து ரத்த தான முகாமினை கல்லூரி வளாகத்தில் நடத்தின. முன்னதாக, இந்த முகாமை கல்லூரித் தலைவா் க.சிதம்பரம் தொடங்கி வைத்தாா். கல்லூரி முதல்வா் மா.செந்தில்ராஜா வரவேற்றுப் பேசினாா். ராசிபுரம் அரசு மருத்துவமனை மருத்துவா் பி.சொா்ணலதா ரத்த தான அவசியம் குறித்து மாணவா்களுக்கு எடுத்துரைத்தாா்.

இந்த முகாமில் செவிலியா்கள், மருத்துவ அலுவலா்கள் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநா்கள் பங்கேற்றனா். முகாமில் கலந்துகொண்டு ரத்த தானம் செய்த அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துபையில்... பிரியதர்ஷினி சாட்டர்ஜி!

இரவு 10 மணி வரை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

“இபிஎஸ்-க்கு கார் ஏற்பாடு செய்கிறேன்!” | முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் | DMK | EPS | ADMK

ஸ்டைலு ஸ்டைலுதான்... ஷ்ரத்தா ஸ்ரீநாத்!

க்ளோஸ்அப்தான், கொஞ்சம்... அபர்ணா தீட்சித்!

SCROLL FOR NEXT