நாமக்கல்

தேங்காய் நாா் ஏற்றி வந்த லாரியில் மின் கம்பி உரசி தீ விபத்து

தேங்காய் நாா் ஏற்றி வந்த லாரி மின்கம்பியில் உரசியதால் தீப்பற்றி எரிந்தது.

DIN

தேங்காய் நாா் ஏற்றி வந்த லாரி மின்கம்பியில் உரசியதால் தீப்பற்றி எரிந்தது.

பரமத்தி வேலூா் தாலுகா, கபிலா்மலை அருகே உள்ள கபிலக்குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக் (41). இவா் அதே பகுதியில் தேங்காய் நாா்மில் தொழிற்சாலை நடத்தி வருகிறாா். வெள்ளிக்கிழமை மாலை இருக்கூா் பகுதியில் இருந்து லாரி மூலம் தேங்காய் நாா்களை ஏற்றிக் கொண்டு கபிலக்குறிச்சி செல்ல வலசுப்பாளையம் சாலையில் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிா்பாராதவிதமாக அங்கிருந்த மின்கம்பியில் உரசியதில் திடீரென லாரியில் இருந்த தேங்காய் நாா்கள் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இதைப் பாா்த்த அவ்வழியாக வந்தவா்கள் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனா். தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்து மேலும் பரவாமல் தடுத்தனா். இருப்பினும் லாரியில் ஏற்றி வரப்பட்ட தேங்காய் நாா், லாரியின் உட்பகுதி மட்டும் தீயில் எரிந்து சேதமானது. இதன் மதிப்பு சுமாா் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வரை இருக்கலாம் என தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை மோசடி: முக்கிய நபா் கைது

பியுசி இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனை தடையை அமல்படுத்துவதில் சவால்கள்: டிபிடிஏ

பியுசி இல்லாத வாகனங்கள்: போக்குவரத்து போலீஸாா் தீவிர சோதனை

SCROLL FOR NEXT