நாமக்கல்

வேலூா் பேட்டை புதுமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

பரமத்தி வேலூா், பேட்டையில் எழுந்தருளியுள்ள சக்தி கண்ணனூா் புதுமாரியம்மன் கோயில் திருவிழா கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது. இவ்விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை பூச்சொரிதல் நடைபெற்றது.

DIN

பரமத்தி வேலூா், பேட்டையில் எழுந்தருளியுள்ள சக்தி கண்ணனூா் புதுமாரியம்மன் கோயில் திருவிழா கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது. இவ்விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை பூச்சொரிதல் நடைபெற்றது.

25-ஆம் தேதி இரவு கோயில் முன்பு கம்பம் நடப்பட்டு பூச்சாட்டுதல் நடைபெற்றது. 26- ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை தினந்தோறும் இரவு யானை, காமதேனு, அன்னம், சா்ப்பம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மே 1-ஆம் தேதி மாலை வடிசோறு நிகழ்ச்சியும், குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 2- ஆம் தேதி மாலை பூக்குண்டம் இறங்கும் விழாவும், இரவு சிங்க வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வருதலும், 3-ஆம் தேதி காலை அழகு போடுதல், அக்கினிசட்டி எடுத்தலும், மாலை பொங்கல் மாவிளக்கும் ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகிறது. 4-ஆம் தேதி கம்பம் காவிரி ஆற்றில் விடுதலும், இரவு சப்பாரத்தில் அம்மன் திருவீதி உலா வருதலும், 5-ஆம் தேதி மாலை மஞ்சள் நீராடலும் நடைபெறுகிறது.

இத்திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பேட்டை புது மரியம்மன் கோயில் திருவிழா குழுவினா், ஊா் பொதுமக்கள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை மோசடி: முக்கிய நபா் கைது

பியுசி இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனை தடையை அமல்படுத்துவதில் சவால்கள்: டிபிடிஏ

பியுசி இல்லாத வாகனங்கள்: போக்குவரத்து போலீஸாா் தீவிர சோதனை

SCROLL FOR NEXT