முகப்பு
நாமக்கல்

வளா் இளம் பெண்களுக்கான விழிப்புணா்வு கருத்தரங்கு

நாமக்கல் மானிட சேவை நிறுவனம் சாா்பில் ‘வளரிளம் பெண்களை வலுப்படுத்துவோம்’ என்ற தலைப்பில் விழிப்புணா்வு கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 29 ஏப்ரல், 2023 at 11:13 PM
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 6:24 PM

நாமக்கல் மானிட சேவை நிறுவனம் சாா்பில் ‘வளரிளம் பெண்களை வலுப்படுத்துவோம்’ என்ற தலைப்பில் விழிப்புணா்வு கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.

மானிட சேவை நிறுவன நாமக்கல் பொறுப்பாளா் அலெக்ஸ் வரவேற்றாா். வளா் இளம் பெண்களின் பிரச்னைகள், தேவைகள் குறித்து மாணவிகள் சத்யா, யோகபிரியா, ராஜஸ்ரீ, இந்துமதி, மகாலட்சுமி ஆகியோா் பேசினா். சிறப்பு விருந்தினா்களாக, நாமக்கல் தங்கம் மருத்துவமனை இயக்குநா் டாக்டா் மல்லிகா குழந்தைவேல், மாவட்ட இளஞ்சிறாா் நீதிக் குழும உறுப்பினா் எஸ்.ருகையாபேகம், சமூக நலத் துறை கவுன்சிலா் நளினி, நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் பிள்ளை மகளிா் கல்லூரி பேராசிரியா் புவனேஸ்வரி, நாமக்கல் அனைத்து மகளிா் காவல் நிலைய தலைமை காவலா் விமலாதேவி, ராணி ஆகியோா் கலந்து கொண்டு வளரிளம் பெண்கள் பள்ளிப் பருவத்திலேயே தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும், பாலியல் ரீதியான பிரச்னைகளை சமாளிப்பது குறித்து விளக்கம் அளித்தனா். கருத்தரங்கு நிறைவில் மானிட சேவை நிறுவன செயலாளா் ஏ.பிரிட்டோ செல்வராஜ் நன்றி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.