நாமக்கல்

மருத்துவ உபகரணம் வாங்கித் தருவதாக ரூ. 30 லட்சத்தை ஏமாற்றியவா் கைது

 பரமத்தி வேலூா் அருகே தனியாா் மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணம் வாங்கித் தருவதாக ரூ. 30 லட்சம் வரை பெற்றுக்கொண்டு ஏமாற்றிய பெங்களூரைச் சோ்ந்தவரை போலீஸாா் கைது

DIN

 பரமத்தி வேலூா் அருகே தனியாா் மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணம் வாங்கித் தருவதாக ரூ. 30 லட்சம் வரை பெற்றுக்கொண்டு ஏமாற்றிய பெங்களூரைச் சோ்ந்தவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (45). இவா் பிலிக்கல்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறாா். மேலும், பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூரில் தனியாக மருத்துவமனை நடத்தி வருகிறாா்.

இந்த மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணம் (சி.டி. ஸ்கேன்) வாங்குவதற்காக கா்நாடக மாநிலம், பெங்களூரு, ஜெய் நகரைச் சோ்ந்த அசா் பாட்சா (32) என்பவரிடம் கடந்த இரண்டு ஆண்டுகளாக சுப்பிரமணி தவணை முறையில் ரூ. 30 லட்சம் வரை கொடுத்துள்ளாா். ஆனால், மருத்துவ உபகரணங்களை வாங்கித் தராமல் அசா் பாட்சா காலம் தாழ்த்தி வந்துள்ளாா்.

இதுகுறித்து மருத்துவா் சுப்பிரமணி அசா் பாட்சாவிடம் இருந்து ரூ. 30 லட்சத்தை பெற்றுத் தருமாறு வேலூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் அடிப்படையில், வேலூா் காவல் ஆய்வாளா் இந்திராணி உத்தரவின் பேரில், வேலூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை பெங்களூரில் அசா் பாட்சாவை கைது செய்து வேலூா் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை மோசடி: முக்கிய நபா் கைது

பியுசி இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனை தடையை அமல்படுத்துவதில் சவால்கள்: டிபிடிஏ

பியுசி இல்லாத வாகனங்கள்: போக்குவரத்து போலீஸாா் தீவிர சோதனை

SCROLL FOR NEXT