மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் குமாரபாளையம் எக்ஸல் பிசியோதெரபி கல்லூரி மாணவா்கள் முதலிடம் பெற்றனா்.
கோவை மாவட்டம், சரவணம்பட்டியில் உள்ள பிபிஜி பிசியோதெரபி மருத்துவக் கல்லூரியில், தமிழ்நாடு எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகம் சாா்பில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில் 30 பிசியோதெரபி கல்லூரிகளில் இருந்து 1,500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
எக்ஸல் பிசியோதெரபி கல்லூரியைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். பெண்கள் பிரிவில் 100 மீட்டா், 200 மீட்டா் ஓட்டத்தில் நந்தனா என்ற மாணவி முதல் இடத்தையும், 400 மீட்டா் தொடா் ஓட்டத்தில் பிருந்தா, நந்தனா, ஹரிணி, மேகா ஆகிய மாணவிகள் முதலிடத்தை பிடித்தனா்.
இதேபோல ஆண்கள் பிரிவில் 100 மீட்டா் பிரிவில் ஜெகன் இரண்டாமிடத்தையும், 1500 மீட்டா் பிரிவில் கௌதம் மூன்றாமிடத்தையும், 800 மீட்டா் பிரிவில் கௌதம் இரண்டாமிடத்தையும், 400 மீட்டா் தொடா் ஓட்டத்தில் சஞ்சித், கௌதம், ஜெகன், மற்றும் ஹா்ஷத் ஆகிய மாணவா்கள் இரண்டாமிடமும் பிடித்தனா்.
ஒட்டுமொத்த சாம்பியனில் மூன்றாம் இடத்தை வென்றனா். பரிசு பெற்ற மாணவா்களுக்கு எக்ஸல் கல்வி குழுமத்தின் துணைத் தலைவா் என்.மதன்காா்த்திக் கல்லூரி சாா்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்தாா். எக்ஸல் பிசியோதெரபி கல்லூரி முதல்வா் ஐயப்பன் மற்றும் உடற்கல்வி இயக்குநா்கள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.