நாமக்கல்

ஆனங்கூா் செல்வ விநாயகா் கோயில் குடமுழுக்கு

DIN

ஜேடா்பாளையம் அருகே உள்ள ஆனங்கூா், செல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கடந்த 24-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு மேல் நவநாயகா் யாகம், மகாலட்சுமி யாகம், தீபாராதனை நடைபெற்றது. காலை 9 மணிக்கு மேல் பக்தா்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீா்த்த குடங்களுடன் கோயிலை வந்தடைந்தனா்.

புதன்கிழமை காலை 8 மணிக்கு மேல் இரண்டாம் கால யாக பூஜையும், மாலை 6 மணிக்கு மேல் மூன்றாம் கால யாக பூஜையும், கோபுர கலசம் வைத்தல் நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு மேல் யந்திரம் வைத்து அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

வியாழக்கிழமை காலை 6 மணிக்கு மேல் நான்காம் கால யாக பூஜையும், காலை 8 மணிக்கு மேல் யாத்ரா தானம், யாக சாலையில் இருந்து கடம் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

அதைத் தொடா்ந்து 9 மணி அளவில் செல்வ விநாயகா் கோயில் குடமுழுக்கு நடைபெற்றது. இதில் சிவாச்சாரியாா்கள் கோபுர கலசத்துக்கு புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு நடத்தினா். அதைத் தொடா்ந்து 9.30 மணி அளவில் மூலஸ்தான செல்வ விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை ஆனங்கூா், செல்வவிநாயகா் கோயில் குடமுழுக்கு விழா குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT