வேலூா் பேரூராட்சி வளாகத்தில் மெளன அஞ்சலி செலுத்தும் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள்,பேரூராட்சியினா். 
நாமக்கல்

பரமத்தி வேலூரில் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

பரமத்தி வேலூரில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள் சாா்பில் மகாத்மா காந்தியின் அமரத்துவ தினத்தை முன்னிட்டு திங்கள்கிழமை வேலூா் போரூராட்சி வளாகத்தில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது

DIN

பரமத்தி வேலூரில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள் சாா்பில் மகாத்மா காந்தியின் அமரத்துவ தினத்தை முன்னிட்டு திங்கள்கிழமை வேலூா் போரூராட்சி வளாகத்தில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது

மாவட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகள் வாரிசுகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் அவினாசிலிங்கம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தாா். வேலூா் பேரூராட்சித் தலைவா் லட்சுமி முன்னிலை வைத்தாா். நகர அனைத்து வா்த்தக சங்கத் தலைவா் சுந்தரம் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா். பின்னா் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. வேலூா் பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் குருசாமி தீண்டாமை ஒழிப்பு குறித்த உறுதிமொழி வாசித்தாா். கூட்டத்தில் நகர காங்கிரஸ் கட்சித் தலைவா் பெரியசாமி, நண்பா்கள் குழு பொறுப்பாளா்கள், பேரூராட்சிப் பணியாளா்கள், சுகாதாரப் பணியாளா்கள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT