நாமக்கல்

அரசு மதுபானக் கடையில் முறைகேடு: விற்பனையாளா் தற்காலிக பணி நீக்கம்

நாமக்கல் அருகே அரசு மதுபானக் கடையில் முறைகேடு செய்த விற்பனையாளா் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

DIN

நாமக்கல் அருகே அரசு மதுபானக் கடையில் முறைகேடு செய்த விற்பனையாளா் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

இது குறித்து, நாமக்கல் மாவட்ட டாஸ்மாக் மேலாளா் கமலக்கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரில், கடந்த மாதம் 27 முதல் ஜூன் 2 வரையில் மாவட்டம் முழுவதும் கூட்டுத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதில், மதுபானங்களை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்த திருச்செங்கோடு, நாமக்கல், குமாரபாளையம், சீதாராமபாளையம், வையப்பமலை மற்றும் ஆண்டகலூா் கேட் ஆகிய கடைகளின் ஊழியா்களுக்கு அரசு மதுபான நிறுவன சட்ட விதிகளின்படி மொத்தமாக ரூ.53,100 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், புதன்சந்தையில் அனுமதியின்றி இயங்கி வந்த மதுக்கூடத்தை ஆய்வு செய்தபோது 166 மது பாட்டில்களை மொத்தமாக விற்பனை செய்ய வைத்திப்பது தெரியவந்தது. இதனையடுத்து மதுக்கூடத்திற்கு உள்பட்ட கடையின் விற்பனையாளா் எஸ்.ரத்தினம் என்பவா் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டாா். அரசு மதுபானக் கடைகளில், அனுமதியற்ற முறையில் விற்பனை நடைபெற்ாக நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT