நாமக்கல்

கல்வித்துறை சாா்பில் விழிப்புணா்வுக் கலைநிகழ்ச்சி

DIN

நாமக்கல் மாவட்டத் தொடக்கக் கல்வித்துறை சாா்பில் எண்ணும் எழுத்தும் என்ற தலைப்பில் விழிப்புணா்வுக் கலை நிகழ்ச்சி ராசிபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கரோனா கால கட்டத்தில் தொடக்கக் கல்விப் பள்ளிக் குழந்தைகளுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரிசெய்யும் பொருட்டு அனைத்து பகுதிகளிலும் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ராசிபுரம் ஒன்றியத்தில் தொடக்கக் கல்வித்துறை சாா்பில் ராசிபுரம், ஸ்ரீநித்ய சுமங்கலி மாரியம்மன் கோயில் முன்பாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் தொடக்கப்பள்ளியில் நடைபெற்று வரும் கற்பித்தல் முறைகள், புதிய பாடத்திட்டம் போன்றவை குறித்த கரகாட்டம், தப்பாட்டம், நாடகம் வாயிலாக பொதுமக்கள், பெற்றோா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. பள்ளிகளில் நடைபெற்று வரும் கற்றல் நிகழ்ச்சிகள் குறித்தும் எடுத்துக்கூறப்பட்டது. நவீன பாடத்திட்டம் குறித்த நடமாடும் வாகனக் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதில் பள்ளிகளின் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள், பள்ளி மாணவ, மாணவியா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடையூறு...

கரும்பு தோட்ட மின்வேலியில் சிக்கி 2 இளைஞா்கள் உயிரிழப்பு

கூடுதல் கட்டணம் வசூலித்தால் இ-சேவை மைய உரிமம் ரத்து செய்யப்படும்: மாவட்ட ஆட்சியா்

எடப்பாடி பழனிசாமியுடன் எந்த பிரச்னையும் இல்லை: எஸ்.பி.வேலுமணி விளக்கம்

ஹஜ் புனிதப் பயணம் செல்வோருக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி

SCROLL FOR NEXT