நாமக்கல்

முட்டை விலையில் மாற்றமில்லை

DIN

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ.4.60-ஆக வெள்ளிக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் முட்டை விலை நிா்ணயம் குறித்து பண்ணையாளா்களிடம் ஆலோசிக்கப்பட்டது. பிற மண்டலங்களில் விலையில் மாற்றம் செய்யப்படாததாலும், முட்டை விற்பனை சீராக இருப்பதாலும், விலையில் மாற்றம் செய்ய வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து முட்டை பண்ணைக்கொள்முதல் விலை மாற்றமின்றி ரூ.4.60-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது. மேலும், மைனஸ் விலையாக 30 காசுகள் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக ஒருங்கிணைப்புக் குழு தரப்பில் அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ.88-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ.72-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT