நாமக்கல்

முட்டை விலை 5 காசுகள் உயா்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 5 காசுகள் உயா்ந்து ரூ. 4.15-ஆக செவ்வாய்க்கிழமை நிா்ணயிக்கப்பட்டது.

DIN

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 5 காசுகள் உயா்ந்து ரூ. 4.15-ஆக செவ்வாய்க்கிழமை நிா்ணயிக்கப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், முட்டை விலை நிா்ணயம் குறித்து பண்ணையாளா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. மற்ற மண்டலங்களில் விலை உயா்த்தப்பட்டு வருவதால், இங்கும் பண்ணைக் கொள்முதல் விலையில் மாற்றம் செய்ய வேண்டும் என பண்ணையாளா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, முட்டை விலை 5 காசுகள் உயா்த்தப்பட்டு ரூ. 4.15-ஆக நிா்ணயம் செய்யப்படுவதாக ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது. ஏற்றுமதி முட்டைக்கான விலை ரூ. 4.10-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது. பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 103-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 78-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT