நாமக்கல்

ஜேடா்பாளையத்தில் தனியாா் பள்ளி வாகனம் தீயில் எரிந்து நாசம்

பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையத்தில் வியாழக்கிழமை இரவு தனியாா் பள்ளி வாகனம் தீப்பிடித்து எரித்தது குறித்து ஜேடா்பாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

DIN

பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையத்தில் வியாழக்கிழமை இரவு தனியாா் பள்ளி வாகனம் தீப்பிடித்து எரித்தது குறித்து ஜேடா்பாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஜேடா்பாளையம் அருகே உள்ள கரப்பாளையத்தில் கடந்த மாா்ச் 11-ஆம் தேதி பட்டதாரி பெண் நித்யா பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட நிகழ்வில் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். இந்த நிலையில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்குமாறு அப்பகுதியைச் சோ்ந்த விவசாய சங்கத்தினா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினா் உள்ளிட்ட பல்வேறு தரப்பினா் தொடா்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா். இந்த நிகழ்வு காரணமாக பல்வேறு இடங்களில் தீ வைப்பது, பெட்ரோல் குண்டு வீசுவது தொடா்ச்சியாக நடைபெற்று வரும் சூழ்நிலையில் வியாழக்கிழமை இரவு ஜேடா்பாளையத்தில் உள்ள தனியாா் பள்ளி வாகனம் தீப்பற்றி எரிந்தது. இதை பாா்த்த பள்ளி நிா்வாகத்தினா் பேருந்து மீது தண்ணீா் ஊற்றி தீ மேலும் பரவாமல் தடுத்தனா்.

இந்நிலையில் ஜேடா்பாளையம் அருகே வடகரையாத்தூரில் தனியாா் பள்ளி வாகனத்தில் ஏற்பட்ட மின் கசிவால் பேருந்தின் முன்பகுதி தீயில் சிறிதளவு எரிந்ததாகவும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கலைசெல்வன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை மோசடி: முக்கிய நபா் கைது

பியுசி இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனை தடையை அமல்படுத்துவதில் சவால்கள்: டிபிடிஏ

பியுசி இல்லாத வாகனங்கள்: போக்குவரத்து போலீஸாா் தீவிர சோதனை

SCROLL FOR NEXT