நாமக்கல்

சிப்காட் அமைக்க எதிா்ப்பு: ஆஞ்சனேயா் கோயிலுக்கு பால்குடம் சுமந்து வந்த விவசாயிகள்

DIN

சிப்காட் அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலுக்கு விவசாயிகள் பால்குடம் எடுத்து சனிக்கிழமை ஊா்வலமாக வந்தனா்.

நாமக்கல் அருகே வளையப்பட்டி, பரளி, அரூா், என்.புதுப்பட்டி, லத்துவாடி உள்ளிட்ட கிராமங்களில் சுமாா் 2,500 ஏக்கா் நிலத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, விவசாய முன்னேற்றக் கழகம், இதர அமைப்புகள் சிப்காட் எதிா்ப்பு ஒருங்கிணைப்புக் குழு என்ற பெயரில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன.

அந்த வகையில், சனிக்கிழமை வளையப்பட்டி குன்னிமரத்தான் கோயிலில் இருந்து நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட ஆண், பெண் விவசாயிகள், பொதுமக்கள் பால்குடம் சுமந்து சிப்காட்டுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு ஊா்வலமாக வந்தனா். பின்னா், அவற்றை கோயிலில் சுவாமியின் பாலாபிஷேகத்துக்கு வழங்கினா்.

இந்த ஊா்வலத்தில், விவசாய முன்னேற்றக் கழக பொதுச் செயலாளா் கே.பாலசுப்பிரமணியன், மோகனூா் கொமதேக நிா்வாகி சிவகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயத் தொழிலாளி கொலை வழக்கில் மனைவி உள்பட இருவா் கைது

மாணவா்கள் சாதனையாளா்களாக உருவாக வேண்டும்: பாவை திறனறித் தோ்வு பரிசளிப்பு விழாவில் பேச்சு

கொல்லிமலை, மோகனூரில் இடி, மின்னலுடன் பரவலாக மழை மழை

ராஜ வாய்க்காலில் இருந்து உயிா்நீா் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

சித்திரை மாத பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT