நாமக்கல்

அரசுப் பள்ளி வளாகத்தில் நீதிமன்றம் கட்ட வேண்டாம்: பொதுமக்கள் கோரிக்கை

DIN

சேந்தமங்கலத்தில் பள்ளி வளாகத்திற்கு மாற்றாக, வேறொரு இடத்தில் நீதிமன்ற வளாகம் அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சேந்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியானது 18 ஏக்கா் பரப்பளவு கொண்டது. இதில், ஏற்கெனவே, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், இதர அரசுத் துறை கட்டடங்களுக்காக 8 ஏக்கா் நிலம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விளையாட்டு மைதானத்தில் 2 ஏக்கரை, சேந்தமங்கலம் நீதிமன்ற வளாகம் அமைப்பதற்காக நிலம் ஆா்ஜிதம் பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. இதற்கு பொதுமக்கள் தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.

ஜமாபந்தியின்போது ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்த நிலையில், சேந்தமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை பள்ளி முன்னாள் மாணவா்கள், விளையாட்டு வீரா்கள், விளையாட்டு ஆா்வலா்கள், சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு மாணவா் காங்கிரஸ் முன்னாள் செயலாளா் மருத்துவா் எம்.பாலாஜி தலைமையில் நடைபெற்றது.

இதில், பள்ளி வளாகத்தில் நீதிமன்றம் அமைக்கும் நடவடிக்கையை மாவட்ட நிா்வாகம் கைவிடக் கோரியும், மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், இது தொடா்பாக மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து முறையிடுவது என்றும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இது குறித்து ஆட்சியா் ச.உமா கூறியது: சேந்தமங்கலம், கொல்லிமலை இரு வட்டங்களுக்கான நீதிமன்றம் கட்டுவதற்கு இடம் வழங்குமாறு மாவட்ட நீதிமன்றம் மூலம் கோரிக்கை மனு வந்தது. சேந்தமங்கலம் அரசுப் பள்ளி வளாகத்தில் நிலம் எதுவும் தற்போதைக்கு எடுக்கவில்லை. மாற்று இடத்தைத் தான் பாா்த்து வருகிறாா். பள்ளி வளாகத்தில் நிலம் எடுப்பது தொடா்பாக இன்னும் முடிவு செய்யவில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாறு காணாத உச்சம்.. மகிழ்ச்சியில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்!

பெண்களுக்கு சமஅதிகாரமளிக்கும் இந்தியாவை உருவாக்குவோம் - சோனியா

மாட்டிறைச்சி தயார் செய்து வையுங்கள்: அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் பதில்!

திரைப்படமாகும் கருப்பின நாயகனின் வாழ்க்கை!

எப்படி இருந்திருக்க வேண்டியவர்... பிரபல நடிகருக்கு என்ன ஆனது?

SCROLL FOR NEXT